அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், டிச-07மோடியால் செல்லாக்காசு என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வெளிநாடுகளில் வேலைசெய்யும் இந்தியர்கள் மாற்றிக்கொள்ள எந்த ஏற்பாடுகளும் இதுவரை செய்யப்படவில்லை, மேலும் டிசம்பர் 30 ஆம் தேதியுடன் இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளும் காலக்கெடுவும் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், யுஏஈ எக்ஸ்சேஞ்ச் ஊழியர் ஒருவருடன் நடைபெற்ற உரையாடல் என்றும், எதிர்வரும் டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் செல்லாத நோட்டுக்கள் மாற்றிக்கொடுக்கப்படவுள்ளதாகவும் வாட்ஸ்அப்பில் சுற்றிவரும் தகவலில் உண்மையில்லை என்றும், செல்லாத நோட்டுக்களை மாற்றிக்கொடுக்க எத்தகைய ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை மேலும் இந்திய அரசும் இது சம்பந்தமாக எந்த வழிகாட்டலையும் வழங்கவில்லை என்றும் அமீரகத்தில் செயல்படும் யுஏஈ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் அதிகாரபூர்வமாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-