அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஜனவரி மாதம் பாலைவன டி20 லீக் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் 14-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது.


ஜனவரி மாதம் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை யு.ஏ.இ., ஆப்கானிஸ்தான், ஹாங்காங், அயர்லாந்து, நமிபியா, நெதர்லாந்து, ஓமன் மற்றம் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கும் ‘பாலைவன டி20 கிரிக்கெட் தொடர்’ நடைபெற இருக்கிறது என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

இதுகுறித்து எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டின் உறுப்பினர் சயத் அப்பாஸ் கூறுகையில் ‘‘இந்த தொடரின் முக்கிய நோக்கமே எங்களுடைய அணிகள் ஆண்கள் டி20 கிரிக்கெட் தொடரில் இன்னும் அதிக அளவில் போட்டிக்கு தயாராகும் வகையில் நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஒவ்வொரு அணியும் ஐ.சி.சி.யின் டி20 தரவரிசையில் இடம்பிடிக்கக் கூடிய வகையில் உள்ளது. இதனால் கடுமையான வலுவான தரமான கிரிக்கெட்டை எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-