அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத்தில் தற்போது உள்ள வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு வழங்கும் Sponsorship முறை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று குவைத் மனித உரிமை அமைப்பு( Kuwait association for the found mantle of the human right)தங்க ஆண்டறிக்கையில் கடுமையாக விமர்சித்து அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளது.

தற்போது உள்ள Sponsorship முறை தொழிலாளர்களை அடிமை முறையில் மட்டுமே நடத்துவதாக உள்ளது 

என்று அந்த அமைப்பு மேலும் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த நடைமுறை உடனடியாக நிறுத்தி தொழிலாளர்கள் உரிமைகளுக்கு முட்டுக்கட்டை போடாத விதத்தில் சர்வதேச தரத்தில் தொழிலாளர்கள் சட்டத்தை மாற்றி அமைக்க மனித உரிமை அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

மேலும் குவைத்தில் வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு வழங்கும் #ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே வேறு வேலை தேட குவைத் தொழிலாளர் சட்டப்படி அனுமதி இல்லை.

இதை பயன்படுத்தி Sponsor தொழிலாளர்களை பல்வேறு முறையில் கொடுமைபடுத்துவதாக அந்த அமைப்பு விமர்சித்துள்ளது.

குவைத் தொழிலாளர் துறை அமைப்பு அதிகாரிகள் வரும் முழுவதும் குவைத்தில் நடத்தும் சோதனையில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்புகிறது. 

குவைத் தொழிலாளர் விதிமுறைகள் மீறியதாக இவர்களை நாடு கடத்துவது குறித்து இந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. 

இப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து இறுதிகட்ட தீர்ப்பு வந்த பிறகு மட்டுமே நாடுகடந்த வேண்டும் என்றும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் குவைத் மக்களுக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் 
வெவ்வேறான சிகிச்சை முறையினை வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

இருந்தாலும் வீட்டுத் தொழிலாளர்களுக்கு தனி சட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைமுறைகள் கொண்டு வந்ததும், குவைத் தேசிய மனித உரிமை அமைப்புக்கு வடிவம் வழங்கியதும் வரவேற்க்கதக்கது என்று அமைப்பு பாராட்டியுள்ளது. 

http://news.kuwaittimes.net/website/rights-group-calls-end-kafala-system/

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-