அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தற்போழுது ரோட்டோர கடைகளிலும், பெரும்பாலான டீ கடைகளிலும், ஒன் யூஸ் பொருட்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளன. இதில் ஒரளவு இவற்றின் பாதிப்புகள் குறித்து நாம் அறிந்திருப்போம். பேப்பர் கப்களிலும் உள்ள மெழுகு உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்க கூடியது என்பது குறித்து நமக்கு தெரியும்.
இருப்பினும் சில சந்தர்ப்ப சூழல்களின் காரணமாக இவற்றை முற்றிலும் நம்மால் தவிர்க்க முடியாத நிலை உள்ளது. இந்த பேப்பர் கப்களை போன்று ஒன் யூஸ் ப்ளேட், ஸ்பூன் ஆகியவை சுண்டல், பானி பூரி விற்க்கும் ரோட்டோர கடைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றில், நாம் சாப்பிட்டு விட்டு பின்னர் அந்த ஒன் யூஸ் பொருட்களை கடையில் உள்ள குப்பை கூடையில் போட்டு விடுகிறோம். குப்பை கூடையில் போடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இவ்வாறு நம்மால் குப்பை கூடையில் போடப்படும் அந்த பொருட்களை கடைக்காரர்கள் மீண்டும் எடுத்து பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக இதில் ஒன் யூஸ் ப்ளேட்களையும், ஸ்பூன்களையும் மீண்டும் தண்ணீரில் அலசி பயன்படுத்துகின்றனர். இந்த ஒன் யூஸ் பொருட்கள் மிகவும் தரம் தாழ்ந்த ப்ளாஸ்டிக் மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் சூடான பொருட்களை வைத்து உண்ணும் போது நமது உடலுக்குக்குள் நச்சுத்தண்மையுடன் தான் உணவு செல்கின்றது.
இதனை ஒருமுறைக்கு பல முறை பயன்படுத்தும் போது சூடான உணவின் காரணத்தால், ரசாயன மாற்றம் அதிகளவில் நிகழ்கின்றன. இதன் காரணத்தால் மிகவும் ஆபத்தான நோய்களால் நாம் பாதிக்கப்படலாம்.
இவற்றை தடுக்க நாம் செய்ய வேண்டிய மிகவும் சாதாரண ஒரு செயல் தான்!
எனவே சில சந்தர்ப்ப சூழல்களில் ரோட்டோர கடைகளில் ஒன் யூஸ் பொருட்களை பயன்படுத்த நேரந்த சாப்பிட்டு முடிந்த பிறகு, அவற்றை கிழித்தோ, கசக்கியோ அல்லது உடைத்தோ குப்பை கூடையில் போடுங்கள். இவ்வாறு நாம் செய்யும் போது கடைகாரர்கள் அந்த ஒன் யூஸ் பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் ஆகிவிடுகின்றன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-