அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தினத்தந்தி நாளிதழ்:


வேப்பந்தட்டை அருகே வங்கியில் பணம் எடுக்க முடியாததால் வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்புவேப்பந்தட்டை அருகே, வங்கியில் பணம் எடுக்க முடியாததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வங்கியில் பணம் எடுப்பதில் சிரமம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில், வி.களத்தூர், வண்ணாரம்பூண்டி, மரவநத்தம், பிம்பலூர், இனாம்அகரம், திருவாலந்துறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளனர்.

இந்த நிலையில், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்த வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதாவது, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வரும்போது குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கிறது. மற்ற வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் பணம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பும் நிலை இருந்து வருகிறது.

சாலை மறியல்

நேற்று காலையிலும் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் பலர் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வங்கியின் முன்பு உள்ள வண்ணாரம்பூண்டி-வி.களத்தூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  


தினகரன் நாளிதழ்!


தினமணி நாளிதழ்!

வங்கியில் பணம் எடுக்க முடியாததால் பொதுமக்கள் சாலை மறியல்!
பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை அருகே வங்கியில் போதிய பணம் கையிருப்பில் இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8 ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து, புதிய நோட்டுகளைப் பெற பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் கிளைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களும் (ஏ.டி.எம் மையங்களும்) செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில், வேப்பந்தட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கிளையின் வாடிக்கையாளர்கள், கடந்த சில நாட்களாக மணிக்கணக்கில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வங்கிப் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். வங்கியில் போதிய பணம் கையிருப்பில் இல்லாததால்,வாடிக்கையாளர்களுக்கு பணம் அளிப்பதில் காலதாமதம் செய்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,புதன்கிழமை வங்கியில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள காத்திருந்த வாடிக்கையாளர்களில் (100-க்கும்) குறைவான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதாம். மீதமுள்ள வாடிக்கையாளர்களுக்கு பணம் கையிருப்பில் இல்லை என வங்கியாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாம். இதனால்,ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், வி.களத்தூர் -வண்ணாரம்பூண்டி சாலையில் வங்கி எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வி. களத்தூர் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-