அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது:

இந்திய வரி அமைப்புகள் எந்த அளவிற்கு மக்கள் மீது திணிக்கப் படுகின்றன என்பதற்கு  கீழே உள்ள கேள்வி பதில் சுவையாக இருக்கும்...

அதேவேளையில் இந்த வரி களை நாம் கட்டுகிறோம் என்பதில் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

1)என்ன வேலை செய்கிறாய் ?

வியாபாரம் ..

அப்படியென்றால் PROFESSIONAL TAX கட்டு 

2)வியாபாரத்தில் என்ன வேலை செய்கிறாய் ?

பொருட்களை விற்கிறேன்..

ஓ அப்படியா ,SALES  TAX  ஐ கட்டு.

3)எங்கிருந்து பொருட்களை வாங்குகிறாய் ?

வெளிநாட்டில் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து

அப்படியா ,சரி CENTRAL  TAX   மற்றும் 
CUSTOMS  DUTY  TAX  ஐ கட்டு.

4)பொருட்களை விற்பதன் மூலம் உனக்கு என்ன கிடைகிறது ?

வருமானம் (INCOME )...

நன்று INCOME   TAX  ஐ கட்டு

5 )பொருட்களை நீயே தயார் செய்து விற்கிறாயா ?

ஆம் .

எங்கு தயார் செய்து விற்கிறாய் ?

FACTORY  இல் .

அப்படி என்றால் ,EXCISE  DUTY  இனை கட்டு .

6 )உன்னிடம் FACTORY  இருக்கிறதல்லவா ?

ஆம் . 

அப்படியென்றால் ,FIRE  TAX  மற்றும் MUNICIPAL  டக்ஸ் ஐ கட்டு.

7) உன்னிடம் வேலை ஆட்கள் இருகிறார்களா ?

ஆம் -

சரி STAFF  PROFESSIONAL  TAX  ஐ கட்டு.

8 )மில்லியன் கணக்கில் பணம் சம்பாதிகிறாயா ?

ஆம் ...

அப்படி என்றால் TURNOVER  மற்றும் ALTERNATE  TAX  இனை கட்டு .

9 )25000 உனது வங்கியில் இருந்து மொத்தமாக  எடுகிறாயா.

ஆம் .

CASH  HANDLING  TAX  இனை கட்டு .

10 ) உன்னுடைய CUSTOMER ஐ வெளி  இல்(ஹோட்டல்) அழைத்து செல்கிறாயா ?

ஆம்...

FOOD மற்றும் ENTERTAINMENT  TAX  இனை கட்டு .

11)நீ யாருக்காவது சேவை தருவது /மற்றும் சேவை)  இனை வாங்குகிறாயா(service given  or  taken )

ஆம் ...

சரி -SERVICE  TAX  ஐ கட்டு .

12)யாருக்காவது பரிசு கொடுத்தாயா ?

ஆம்...

அப்படி என்றால் ,GIFT  TAX  ஐ கட்டு.  
.
.
.
.
.
.
. சரி ... வரி வசூலிக்கும் அரசே உனக்கு நான் சில கேள்விகள் கேட்கிறேன்...
.
.
.
.நீ பிறப்புக்கும்..இறப்புக்கும் மட்டுமே வரி போடவில்லை... 

அது போகட்டும்...

நான் 5 லட்சம் சம்பாதிக்கிறேன், 2.5 லட்சத்துக்கு வட்டி கட்ட சொல்ற! 

சரி கட்டிட்டேன்...

மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன், அதுலையும் பத்திர பதிவுன்னு 14% வாங்குற...

நகை வாங்க போறேன் அங்கேயும் வரி வசூல் பண்ற...மக்களை சாகடிச்சி புடுங்குற...

கார் வாங்கும்போதே ரோடு வரி.. வாகன வரின்னு சேர்த்து புடுங்குற..

அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வரின்னு வசூலிக்கிற...

பெட்ரோல் போடும்போது அங்கேயும் மறைமுகமாக வரி புடுங்குற....

இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா! 

நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பேனிக்கு லோன் கொடுப்ப? 

மல்லையா மாதிரி ... பல  மொள்ளமாரிகளுக்கு லோன் கொடுப்ப....

பணத்துலேயே பொறந்து வளந்த கோடீஸ்வரங்களுக்கு லோன் கொடுப்ப...

கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பன்னுவே?! 

கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் பணம் செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்ப...

லட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவடிக்கை எடுத்த? 

இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா?

கட்டுவானா....????????

பதுக்கத்தான் செய்வான். 

முதலில் சட்டத்தை மாத்து....

எல்லா சிஸ்டத்தை மாத்து...

 சில மாதங்கள் கழித்தும் அவன் பணத்தை டாலராக தங்கமாக சொத்தாக வாங்கத்தான் செய்வான். 

வரியை ஒழுங்காக நடைமுறை படுத்து..

காரி துப்புறமாதிரி எல்லா சிஸ்டமும் இருக்குது....!

சவூதி அரேபியாவில் வாழும் எந்த குடிமகனுக்கும் income tax வரி கிடையாது..!
வருமாணத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி எந்த ஒரு பணக்காரரின் வீட்டிலும் CBI சோதனை என்ற பெயரில் அரசியல் பித்தலாட்ட ரெய்டுகள் கிடையாது..!

நீதிமன்ற வழக்கும் கிடையாது.
மாறாக ஒவ்வொரு குடிமகனையும் தனது பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கச் சொல்கிறது அந்நாட்டு அரசு..!

திறமை இருப்பவன் அதிகம் அதிகமாய் சம்பாதித்துக்கொள், நீ யாரிடமும் கணக்கு காட்ட தேவையில்லை என்கிறது..!
இதனால் அங்கே கருப்பு பணம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது..!

சுவிஸ் பேங் என்றால் என்னவென்றும் அந்நாட்டு மக்களுக்கு தெரியவே தெரியாது..!
But: ஒரே ஒரு #கண்டிஷன்....

யாரிடமும் திருடாதே, திருடினால் உனது கையை வெட்டி விடுவேன்..!

இதுதான் சவுதியின் வருமாண வரிச் சட்டம்.
அதேபோல் மக்களிடமே வரி வாங்கி... அதிலே சாலை அமைத்து....

அதில் செல்லும் மக்களிடமே மீண்டும் டோல்கேட் போட்டு காசை பிடுங்கும் திருட்டு புத்தியும் அவர்களிடம் இல்லை...!
அப்படியும் கூட ரகசியமாக ஒரு வருமான வரி இருக்கிறதென்றால் அதுவும் உண்மைதான்...!

அதாவது தனது வருமாணத்தில் 2.5% வரியை கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற சிறப்பு சட்டமும் உள்ளது...

ஒரு மனிதன் தனது செலவுகள் போக ஒரு வருடத்தில் 10ஆயிரம் ரூபாய் சம்பாதித்து இருந்தால் அவன் 250ரூபாய் வரி செலுத்த வேண்டும்..!
தனது ஆண்டு வருமாணத்தில் செலவு போக மீதம் எவ்வளவு உள்ளது என்று நோன்பு மாதம் தொடங்கும் முதல் நாளே சரியாக கணக்கு பார்த்து தனது மனசாட்சிக்கு விரோதமின்றி தனக்குத்தானே எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்..!

அந்த கணக்கை வேறு யாரிடமும் சென்று காட்ட வேண்டிய அவசியமுமில்லை...!

எஞ்சிய அந்த வருமாணத்தில் அல்லது சொத்தில்....

இரண்டரை சதவிகிதம் வரியை அவர் அந்த நோன்பு 30நாட்களுக்குள் செலுத்தி விட வேண்டும். அந்த income tax வரியின் இன்னொரு பெயர்தான் ஜகாத் என்கிற தர்மம்.!!!

இது சவுதி மட்டுமல்ல ஒட்டு மொத்த உலக முஸ்லீம்களுக்குமான சட்டம்.
அந்த வரியை வசூலிக்க வேண்டிய அதிகாரிகள் வேறு யாருமல்ல..!

அந்த ஊரில் வசிக்கும் ஏழை, பாலைகள்தான் அந்த வசூல் அதிகாரிகள்.
அப்படியே அந்த வருடாந்திர வரியை ஒருவன் செலுத்த மறுத்தாலோ அல்லது வருமாண கணக்கை தனக்குத் தானே மறைத்தாலோ...

அதில் அரசு அதிகாரிகளோ , அல்லது அதை வசூலிக்க வரும் ஏழைகளோ யாரும் அவர்களை தட்டி கேட்கவும் மாட்டார்கள்..!
ஏனென்றால்.... அவனது மரணத்திற்கு பிறகு உரிய கணக்கை அவனிடம் நான் வாங்கி கொள்கிறேன் என இறைவனே கூறி விட்டதால் அதில் நடைபெறும் வரி ஏய்ப்பு பற்றி அந்த நாட்டு அரசுக்கு எந்த கவலையுமில்லை.!
வரி வரி என்று ... வெறிபிடித்து வழிப்பறி செய்து... குடிமக்களின் வியர்வையை அரசே உறிஞ்சி குடித்துவிடக் கூடாது...!

என்பதுதான்... முஹம்மது நபிகளார் இயற்றிய இஸ்லாமிய_சட்டம்.!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-