அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச-28
நேற்று காலை டெல்லி விமான நிலையத்தில் இன்டிகோ விமானமும் ஸ்பைஸ்ஜெட் விமானமும் ஒரே ஓடுதளத்தில் நேருக்கு நேர் மோதவிருந்த நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இன்று அதிகாலை சுமார் 7.30 மணியளவில் லக்னோவிலிருந்து வந்த இன்டிகோ விமானம் டெல்லி விமான நிலையத்தில் 176 பயணிகளுடன் தரையிறங்கியது அப்போது அதே ஓடுதளத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத் புறப்பட சென்று கொண்டிருந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமானி உடனே விமானத்தை நிறுத்திவிட்டு வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு (Air Traffic Controller) தகவல் கொடுத்தனர்.

இந்த தவறு வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தினாலேயே ஏற்பட்டிருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக, இன்று மட்டும் கோவாவில் 1, டெல்லியில் 1 என 2 விமான விபத்துக்கள் இந்தியாவில் இறையருளால் தவிர்க்கப்பட்டுள்ளன.

தகவலுக்காக: 
1996 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து தம்மாம் (தஹ்ரான்) புறப்பட்ட சவுதி ஏர்லைன்ஸ் விமானமும் கஜாகிஸ்தான் நாட்டு விமானமும் வடக்கு டெல்லியின் சர்க்கி தாத்ரி எனும் கிராமத்திற்கு மேல் நடுவானில் சுமார் 15,000 அடி உயரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் சவுதி விமானத்தில் இருந்த 312 பேர் உட்பட இருவிமானத்தையும் சேர்ந்த மொத்தம் 359 பேர் மரணமடைந்தனர். 

இதுவும் டெல்லி வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து வழிநடத்தப்பட்ட தவறான தகவலால் நிகழ்ந்தவையே. இந்த விபத்து வான்வெளியில் நடந்த பெரும் விமான விபத்தாகவும், உலகின் 3வது பெரும் விமான விபத்தாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி ஸ்பெயின், கெனாரி தீவில் (Canary Islands) அமைந்துள்ள டெனரீப் விமான நிலைய (Tenerife Airport) ஓடுபாதையில் KLM விமானமும் PAN AM விமானமும் மோதிக்கொண்டதில் 583 பேர் பலியான சம்பவம் முதலிடத்திலும்,

1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி டோக்கியோவிலிருந்து ஓசாகா விமான நிலையத்திற்கு 509 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தவறான தொடர் பராமரிப்பினால் மிகுந்த கேபின் அழுத்தத்திற்கு உள்ளாகி வெடித்துச் சிதறியதில் 505 பேர் பலியான சம்பவம் உலகின் 2வது பெரிய விமான விபத்தாகவும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sources: NDTV / Indian Express / Wikipedia

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-