அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஸ்மார்ட்போன்களின் சார்ஜ் பிரச்சினைக்காக இப்போது விதவிதமான வழிகளை நாடிக் கொண்டிருக் கிறோம். 

இனி சொந்த கை உழைப்பிலேயே மின்உற்பத்தி செய்து சார்ஜ் ஏற்றலாம். அமெரிக்காவின் புகழ்பெற்ற எலக்ட்ரானிக் பொருள் தயாரிப்பு நிறுவனமான கிக்ஸ்டார்ட்டர் இதற்கான கருவியை உருவாக்கி உள்ளது. 

‘ஹேண்ட் எனர்ஜி’ எனப்படும் இந்தக் கருவி கையடக்கமானது. 

உள்ளங்கைக்குள் அடங்கும் இதனை லேசாக அழுத்தம் கொடுத்து இயக்கினால் போதும், இதற்குள் இருக்கும் காந்தசக்தி கருவி, அந்த அழுத்தத்தை அதிக ஆற்றலாக உயர்த்தி மின்சாரமாக மாற்றி சேமிக்கத் தொடங்கிவிடும். 

இதை சேமிக்க 1000 மில்லி ஆம்பியர் பேட்டரியும் இந்த கருவிக்குள்ளேயே இருக்கிறது. அதிலிருக்கும் யூ.எஸ்.பி. இணைப்பு வழியாக செல்போன் பேட்டரிக்கு சக்தி பரிமாறிக் கொள்ளலாம். 

சூரிய சக்தி கருவி மூலம் சார்ஜ் செய்வது, மனிதனின் உடல் இயக்கத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைவிட, எங்கும் எடுத்துச் சென்று தேவையான இடத்தில் சார்ஜ் செய்து பயன்படுத்த ஏதுவானது இந்த ‘ஹேண்ட்எனர்ஜி’ கருவி. 

ஒரு கையால் செல்போனை இயக்கிக்கொண்டு, மறுகையால் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடிவது கூடுதல் சிறப்பம்சம். இதன்விலை 84 அமெரிக்க டாலர்களாகும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-