அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


'ஆதார்' அட்டை இல்லாத ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரை, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில் சேர்க்க, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பிறப்பு சான்றிதழ் மூலம் விபரங்களை பதியலாம். 

வரும், 2017ல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக உறுப்பினர்களின் 'ஆதார்' விபரங்கள், ரேஷன் கடையின் பி.ஓ.எஸ்., கருவியில் பதியப்பட்டு வருகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' அட்டை வழங்கப்படவில்லை. 

குழந்தைகள் அரை 'யூனிட்' என்ற அளவில் கணக்கீடு செய்யப்பட்டு, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 'ஆதார்' அட்டை இல்லாததால், அவர்களுக்கான பொருட்கள் வினியோகம் குறைக்கப்படும் நிலை ஏற்பட்டது. 

இதை தவிர்க்கும் வகையில், பி.ஓ.எஸ்., கருவியில் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் விபரங்களை பதிய, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-