அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிசம்பர் 6 ஆம் தேதி அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமாகும். அந்த தினத்தில் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டித் தரக்கோரி இஸ்லாமியர்கள் பரவலாக ஆர்பாட்டத்திலும், போராட்டங்களிலும் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், அவர்களைச் சார்ந்த அரசியல் கட்சிகளும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பிலிருந்தே இதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டிருந்தனர். 

இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் என்ற அமைப்பு உயர்நீதிமன்றம் சென்று அந்த தடையை நீக்கச் செய்தது.   

அப்படியிருக்க தமிழக முதல்வரின் மறைவுச்செய்தி வெளியானதும் ஒட்டு மொத்த இஸ்லாமிய அமைப்புகளும் தங்களது போராட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

அவர்களில் தமிழ்நாடு முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் தமீம்மரைக்காயர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த செய்தி தமிழக மக்களுக்கு குறிப்பாக சிறுபாண்மையினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். 

எனவே தற்போது ஏற்பட்டிருக்கும் இந்நிலையை கருத்தில் கொண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று நடைபெற இருந்த இரயில் நிலைய முற்றுகை போராட்டத்தை ரத்து செய்து தலைமை நிர்வாககுழு முடிவு செய்திருக்கிறது. 

மேலும் பாபர் மசூதி தொடர்பான நமது உணர்களை பிரார்தனையாக மாற்றிகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவ்விதம் எஸ்.டி.பி.ஐ, தமுமுக, தமீமுன் அன்சாரியின் கட்சி உள்ளிட்ட  பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் தாங்கள் ஏற்பாடு செய்திருந்த கண்டன நிகழ்ச்சிகளை ரத்து செய்து அம்மாவுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-