அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி அரேபிய பெண்களை வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்கள் திருமணம் செய்துக்கொள்வது குறித்து, ஒரு இறுக்கமான சட்டம் ஒன்றை அமுல்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சவூதி நாட்டுப் பெண்களைத் திருமணம் முடிக்கும் பிறநாட்டு ஆண்களை போதைப் பொருள் பாவனை குறித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டத்தைக் கொண்டுவர உள்ளது.

திருமணத்திற்கு பிறகு போதைப்பொருள் பாவனையால் சமூகப் பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த திட்டத்தை சவூதி அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த புதிய நடைமுறை தொடர்பில் சுகாதார அமைச்சு சகல வைத்தியசாலைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.

இந்த புதிய நடைமுறையினால் விவாகரத்து பிரச்சினைகளும் குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வருடம் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 3,596 ஆண்கள் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்துள்ளனர். இதேபோல், சவூதி அரேபியாவைச் சேர்ந்த 3,352 பெண்கள் வெளிநாட்டு ஆண்களைத் திருமணம் செய்துள்ளனர் என அந்நாட்டு புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு சவூதியில் 133,000 திருமணங்களும், 40,000 விவாகரத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

ஆசியா, தெற்காசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பலர், சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-