அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அமீரகம் !
சலவைக்குப் போட்ட
தார் சாலைகள் !

கற்பிழக்காத
கற்பனைகளின் கோட்டைகளாய்
கட்டிடங்கள் !

இருளையும், அழகாக்கும்
ஒளி விளக்குகள் !
நிலமகளின் ஹிப்பி !

தூங்கா நகரம்
மதுரை மட்டுமல்ல ….
அமீரகமும் தான் !

அமீரக அகராதியிலிருந்து
அகற்றப்பட்ட
முதல் சொல்
ஏழை !

வானமகளை
முத்தமிடதுடிக்கும்
வானுயரக் கட்டிடங்கள் !

சந்தனமாய தேயும்
கலப்பைகளாய்
அயலக மக்கள் !

மில்கிவேயைக் கூட
மிஞ்சும்
மின்விளக்குகள் !

வன்ணத்துப் பூச்சிகளாய்
பறக்கும்
வாகனங்கள் !

வானுயர உயர்ந்து நிற்பது
கட்டிடங்கள் மட்டுமல்ல
அமீரக மக்களும் தான்

–முனைவர் ப.இப்ராஹிம்,
தமிழ்த்துறை தலைவர்
டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி
இளையான்குடி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-