அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சிரியா நாட்டில் நடக்கும் போர்கள் நிறுத்தப்பட்டு சமாதானம் நிலவ வேண்டும் என 7 வயது சிறுவன் எழுதியுள்ள கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் கிழக்கு மிட்லேண்ஸ் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஆரூஷ் ஆனந்த் (7) இந்திய வம்சாவளியை சேர்ந்தவனான அரூஷ் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் என்ன பரிசுவேண்டும் என ஒரு கடிதமாக எழுதுமாறு அரூஷ் வகுப்பாசிரியர் மாணவர்களிடம் கூறியுள்ளார்.
அரூஷ் தனது கடிதத்தில் சிரியா நாட்டில் போர்கள் நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் அன்று அமைதி நிலவ வேண்டும், இது தான் எனக்கான கிறிஸ்துமஸ் பரிசு என எழுதி தன் ஆசிரியரிடம் கொடுத்துள்ளான்.
இது குறித்து அரூஷ் கூறுகையில், எனக்கு சண்டையே பிடிக்காது. சிரியா போரில் பலர் கொல்லப்படுகின்றனர். இது நிறுத்தப்பட்டு சமாதானம் நிலவ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-