அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெண்கள் கருத்தரிப்பதில் மிகப்பெரும் அறிவியல் முன்னேற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பூப்பெய்தாத பெண் ஒருவரின் சினைப்பையில் இருந்த திசுக்களை மருத்துவர்கள் உறைநிலையில் வைத்திருந்தனர்.

பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதைப் பயன்படுத்தி, செயற்கை கருவூட்டல் மூலம் அப்பெண் கர்ப்பமாகி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். துபாயைச் சேர்ந்த மோசா அல் மட்ரூஷி தன்னால் மேலும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறார்.

லண்டனில் பெண் ஒருவர், குழந்தை பருவத்தில் நீக்கப்பட்ட சினைப்பையிலிருந்து எடுத்து உறையவைக்கப்பட்ட திசுவால் கருவுற்று குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

24 வயதாகும் மோசா அல் மட்ருஷி என்னும் அந்த பெண்மணி, பூப்படைதலுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட சினைப்பை மூலம் குழந்தை பெற்று கொண்ட முதல் பெண் ஆவார்.

லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையான போர்ட்லாந்து மருத்துவமனையில் அந்த பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்; "அது ஒரு அற்புதமான நிகழ்வு" என்று அவர் அதனை விவரித்துள்ளார்.

"ஆரோக்கியமான குழந்தை ஒன்றிற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம்" என்று மோசா தெரிவித்துள்ளார்.

மகப்பேறியல் மருத்துவர் மற்றும் மோசாவின் மருத்துவரான சாரா மாத்யூஸ், "தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மேலும் இந்நிகழ்வின் மூலம் மற்றவர்களுக்கும் நம்பிக்கை வருவது குறித்தும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்".

"இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம். சினைப்பை திசு மாற்று வயதான பெண்மணிகளுக்கு வேலை செய்யும் என்று எங்களுக்கு தெரியும் ஆனால் குழந்தையாக இருக்கும் போது திசுக்களை எடுத்து உறைய வைத்து அதை திரும்பவும் வேலை செய்ய வைக்க முடியும் என்பது எங்களுக்கு ஆச்சரியத்தைத் தருகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய், ரத்தம் அல்லது நோய் எதிர்ப்புக் கோளாறுகளுக்காக சிகிச்சை எடுத்து கொள்வதால் கருவுற முடியாமல் போகும் ஆபத்தை எதிர்கொள்ளும், பிற சிறுமிகளுக்கும் பிற இளவயது பெண்களுக்கும், குழந்தை பெற்று கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அது தரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

துபாயில் பிறந்த மோசா அல் மட்ருஷி, சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் "பீட்டா தலசமெயா" என்னும் வழிவழியாக வரும் ரத்த கோளாறால் பாதிக்கப்பட்டு வந்தார்.

எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு முன்னதாக கீமோதெரபி அவருக்கு தேவைப்பட்டது. ஆனால் இந்த சிகிச்சை முறை சினைப்பைகளை சேதப்படுத்தும்.

அதனால் அந்த சிகிச்சைக்கு முன்னதாக, அவருக்கு ஒன்பது வயது இருக்கும் போது, அவரது வலது சினைப்பை ஒரு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அதன் திசுக்கள் உறைய வைக்கப்பட்டன.

அவரது சினைப்பை திசு துண்டுகளில், "கிரையோ ப்ரொடக்டிவ் ஏஜண்ட்ஸ்" என்னும் திசுக்களை பாதுகாக்கும் பொருள் கலக்கப்பட்டது, மேலும் திரவ நைட்ரஜனில் வைக்கப்படுவதற்கு முன்பு மெதுவாக 196 செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைக்கப்பட்டது.

கடந்த வருடம், டென்மார்க்கை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால், மோசாவின் சினைப்பை திசுக்கள் ஐந்தாக பிரிக்கப்பட்டு, அதில் நான்கு அவரின் செயலிழந்த இடது பக்க சினைப்பையில் பொறுத்தப்பட்டன; மேலும் ஒன்று அவரின் கர்ப்பப்பையின் பக்கம் தைக்கப்பட்டது.

மோசாவிற்கு மாதவிடாய் நின்று விட்டது ; ஆனால் அந்த மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருடைய ஹார்மோன் அளவுகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கின; மேலும் மாதவிடாய் வர தொடங்கியது; அவரின் கருவுறுதல் தன்மையும் மீட்கப்பட்டது.

மேலும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க மோசாவும் அவரது கணவரும் ஐவிஎஃப் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சேகரிக்கப்பட்ட எட்டு சினைமுட்டைகளில், மூன்று கருமுட்டைகளாக உருவாயின. அதில் இரண்டு இந்த வருடத்தின் தொடக்கத்தில் மோசாவிற்கு பொருத்தப்பட்டது.

கருவுறுதல் தன்மை மீண்டும் மீட்கப்பட்டு உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன; ஆனால் பூப்பெய்தலுக்கு முன்னர் உறையவைக்கப்பட்ட சினைப்பை கொண்டு குழந்தை பெற்றுக் கொண்ட முதல் பெண்மணி மோசாதான்; மேலும் "பீட்டா தலசிமியா" சிகிச்சைக்கு பிறகு கருவுற்ற முதல் பெண்ணும் இவர்தான் என்ற சிறப்பையும் பெறுகிறார் மோசா.

மோசாவின் கருத்தரிப்பு தன்மையை விளக்கும் படம்0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-