அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அபுதாபி(21 டிச 2016) அபுதாபியில் டிசம்பர் -19 அன்று மாலை 5 மணியளவில் அபுதாபி தமுமுகவின் சார்பாக அபுதாபி காலிதியா இரத்த வங்கியில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது.
இம்முகாமில் அபுதாபி வாழ் தமிழ் சகோதரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு இலவச இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சி அபுதாபி தமுமுக பொருளாளர் பரங்கிப்பேட்டை அபுல்ஹசன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் அபுதாபி தமிழ்ச்சங்க தலைவர் திரு. ரெஜினால்டு அவர்களும், அபுதாபி அய்மான் சங்க பொதுச்செயலாளர் ஜனாப். S.A.C. ஹமீது அவர்களும், இதர நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு கவுரவித்தனர்.
அபுதாபி மண்டல தமுமுக துணைச் செயலாளர் அடியற்கை A .I . சேக்தாவுது, மர்கஸ் பொறுப்பாளர் உஸ்மான் அலி மற்றும் அபுதாபி மண்டல மமக செயலாளர் அடியற்கை அல் அமீன், சிட்டி பொறுப்பாளர் ஆயங்குடி ஹபீபுல்லாஹ், பனியாஸ் கிளை செயலாளர் ஆத்தங்கரை நஜிமுதீன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை திறம்பட செய்திருந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-