அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையால்,

இந்தியா ஃபிரடர்னிடி ஃபாரம் ரியாத் தமிழ்பிரிவு சார்பாக "ஹுப்புந்நபி" அகிலத்திற்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்ட உத்தம நபி முஹம்மத் (ஸல்) என்ற நிகழ்ச்சி 23/12/2016  பாத்தா வில்நடத்தப்பட்டது.

சகோதரர் நெய்னா முஹம்மது (அதிரை) அவர்கள் கிராத் ஓதி நிகழ்வை துவங்கி வைத்தார்கள். சகோதரர் முஹம்மது அலி (சென்னை) வரவேற்புரை ஆற்றினார்கள். சகோதரர் அஜ்மல் (மதுரை) இந்த நிகழ்வின் நோக்கத்தை எடுத்துக்கூறியதுடன் தொகுத்தும் வழங்கினார்கள்.

சகோதரர் அபூதாஹிர் (கம்பம்)நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வரலாற்று நிகழ்வுகளை பற்றி சிறப்புரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்வை முன்னிட்டு, முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

முதல் பரிசு சகோதரர் அப்துர் ரஹீம் (நெல்லை) அவர்களுக்கும், இரண்டாம் பரிசு சகோதரி ரைஹான் முஹம்மது ராபி (திருவிதாங்கோடு) அவர்களுக்கும், மூன்றாம் பரிசு சகோதரர் ஷேக் முஹம்மது (மதுரை) அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

அய்யூப் கான் (முத்துப்பேட்டை), ஹபீப் முஹம்மது (முத்துப்பேட்டை), சித்தீக் (திட்டுவிளை), முபாரக் (பரங்கிப்பேட்டை) ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

இறுதியாக சகோதரர் அஜ்மல் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-