அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தோஹா(28 டிச 2016): தோஹா கத்தரில் Ajyal Youth Film Festival என்ற பெயரில் திரைப்பட விழா நடைபெற்று முடிந்திருக்கிறது.
ஊடகங்கள் மற்றும் உலக சினிமாக்களின் அவசியத்தை விளக்கி நடத்தப்பட்ட இந்த திரைப்பட விழாவில் சர்வதேச ஊடகவியலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட அரபு நாட்டில் இருந்து பிரான்ஸிற்குக் குடிபெயர்ந்து அரபுமொழி மட்டுமே அறிந்து தன் மகள்களுடன் பிரான்ஸின் கலாச்சாரத்துடன் ஒன்றிப் போக இயலாமல் போராடும் தாய் "Fathima", அதன் நேரெதிர் திரைக்கதையில் ஹிஜாபிற்காகப் போராடும் சிறுமி "Mariam" பின்பு, The Salesman, Hunt for the Wilderpeople என்று பல திரைப்படங்கள் பலரை வாய் பிளக்க வைத்தது.
சிரியாவில், பாக்தாதில், காபூலில் அமெரிக்கப் படையினரால் குறிவைத்துக் கொல்லப்பட்ட அல்ஜஸீராவின் ஊடகவியலாளர்கள் பற்றிய தொகுப்பு உள்ளிட்டவைகள் இந்த திரைப்பட விழாவின் சிறப்பம்சமாகும்.
Ajyal அமைப்பினரால் இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், பின்னணி குரல் சேர்ப்பு, அனிமேஷன், செய்தியாளர் பயிற்சி என ஊடகவியலுக்குத் தேவைப்படும் அனைத்து சூட்சுமங்களையும் சிறார்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை அடுத்த தலைமுறை ஊடகவியலாளராக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-