அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பிரித்தானியாவின் கிங்ஃபேர்ட் பகுதியில் இஸ்லாமிய யுவதி ஒருவர் அணிந்திருந்த ஹிஜாப்பினை கிழித்தெறிய முற்பட்ட இரண்டு பிரித்தானிய ஆண்களால் குறித்த பெண் கீழே விழுந்து காயஙகளுக்கு உள்ளாகியுள்ளார்.

வருந்தத்தக்க வகையில் குறித்த யுவதியை தாக்கி அநாகரீகமான முறையில் அந்த இரு ஆண்களும் நடந்துகொண்டமை தற்போது அங்கு பரபரப்பை தோற்றுவித்துள்ளது.

வாகனம் ஓட்டும் பயிற்சியை நிறைவு செயது கொண்டு சிகை அலங்காரத்திற்காக கடைக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணை பின்னால் இருந்து இழுந்த இரு ஆண்களும் அப்பெண்ணின் ஹிஜாப்பை கிழித்தெறிய முற்பட்டுள்ளனர். இதனால் அப்பெண் கீழே தள்ளப்பட்டு விழுந்து அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அந்த பகுதி அதிக சனநெறுசல் மிக்கது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தாக்கப்பட்ட பெண் அருகில் இருந்த துருக்கிய ஒணவகம் ஒன்றின் நாற்காலியில் சென்று அமர்ந்துள்ளார். அவரை தமது உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் என நினைத்து பணியாளர் ஒருவர் நெருங்கிய போது அவர் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார். ஹிஜாப் கிழிந்த நிலையில், அப்பெண்களை உணவக பணியாளர்கள் உள்ளே அழைத்துச் சென்று ஆறுதல் படுத்தியுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-