அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், டிச-27
துபாயிலிருந்து கோவா வழியாக மும்பை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுபாதையிலிருந்து சறுக்கியதால் சுமார் 15 பயணிகளுக்கு லேசான காயம் எற்பட்டது.

154 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் அதிகாலை சுமார் 5 மணியளவில் விமானம் மும்பைக்கு புறப்பட்ட போது ஓடுபாதையிலிருந்து எதிர்பாராதவிதமாக சறுக்கி விலகியது. 

எனினும், பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி பயணிகளும் விமானமும் இறையருளால் பத்திரமாகவுள்ளனர்.

இந்திய கடற்படையால் நிர்வகிக்கபடும் கோவாவின் தபோலிம் விமான நிலையம், ஜெட் ஏர்வேஸ் விமான விபத்தை தொடர்ந்து மூடப்பட்டிருந்தது பகல் 12.30க்குப் பின் சகஜநிலைக்குத் திரும்பியது.


Sources: Khaleej Times / Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-