அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்திக்கான ஓட்டுநர் காலிப்பணியிடத்துக்கு (முழு நேரம் ஆண்) (தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் வீதம் சம்பளம் வழங்கப்படும். நேர்காணல் மூலம் நியமிக்கப்படும் ஊர்தி ஓட்டுநர் பணியிடத்துக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, நான்குசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
விருப்பம் உள்ளவர்கள், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய விண்ணப்பப் படிவங்களை பெற்று டிச. 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-