அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், டிச-07துபை ஆம்புலன்ஸ்கள் ஷார்ஜா விமான நிலையம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது

ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், புஜைரா மற்றும் துபையில் இறக்கும் வெளிநாட்டவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்தபின் விமானம் மூலம் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் உடல்களை பதப்படுத்தும் பணிகளை துபை, அல் முஹைஸ்னாவில் அமைந்துள்ள துபை ஹெல்த்கேர் அத்தாரிட்டி மையமே செய்து வருகிறது என்றாலும் இப்படி பதப்படுத்தப்படும் உடல்களை துபை சர்வதேச விமான நிலையங்கள் வழியாக மட்டுமே கொண்டு செல்ல துபை ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்கப்படும் என்றும் ஷார்ஜா, அபுதாபி விமான நிலையங்களுக்கு சேவை இல்லை என்பதுடன் அந்த எமிரேட்டுக்களின் ஆம்புலன்ஸ்களுக்கும் சேவை வழங்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தத் தடையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் குறைகளை அஜ்மானில் தொழிலதிபராகவும், சமூக சேவையாளர்களாகவும் பணியாற்றும் அஷ்ரப் தாமரஸ்ஸேரி அவர்களும், C.P. மாத்யூ அவர்களும் துபை மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து தற்போது துபையிலிருந்து ஷார்ஜா விமான நிலையம் வழியாக உடல்களை கொண்டு செல்லவிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு துபை சுகாதாரத்துறையின் ஆம்புலன்ஸ்களே துபை விமான நிலையத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 220 திர்ஹம் என்ற அதே கட்டணத்திலேயே சேவையை வழங்குகின்றன.

இந்த தடை விலக்கல் மூலம் குறைந்த விமான கட்டணத்திலும், துபை விமான நிலையம் சேவை வழங்காத வெளிநாட்டு விமான நிலையங்களுக்கும், சொந்த ஊருக்கு மிக அருகே அமைந்துள்ள விமான நிலையங்களுக்கும் இறந்தவர்களின் பதப்படுத்தப்பட்ட உடல்களை எளிதாக கொண்டு செல்ல மறுபடியும் வழி பிறந்துள்ளது.

எத்தகைய பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இறந்த வெளிநாட்டு பிரஜைகளின் உடல்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப உதவிவரும் அஜ்மான் வாழ் இந்திய தொழிலதிபர் அஷ்ரப் தாமரஸ்ஸேரி அவர்களின் சேவையை போற்றி இந்திய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நாம் முன்பு அதிரை நியூஸில் பதிவிட்டிருந்த செய்தியை இந்த சுட்டியில் படிக்கவும்.

துபாயில் இறந்த வெளிநாட்டினர் உடல்களை திருப்பி அனுப்புவதில் புதிய சிக்கல் !
Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-