அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இன்றைய காலகட்டத்தில் நம்மைவிட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருப்பவர்களையும் நம்மருகில் இருப்பது போன்று நினைவுபடுத்த வைப்பது வீடியோ காலிங்.
அதிலும், வீடியோ காலிங் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது Skype மட்டுமே.
இப்படிபட்ட முன்னணி வலைத்தளமான ஸ்கைப்பில் அவ்வப்போது புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்கிறது அந்நிர்வாகம்.
இதன் வரிசையில், தற்போது ஒரு புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, ஸ்கைப்பில் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்யாமலேயே வீடியோ காலிங் செய்யும் வசதி தான் அது.
இதன் மூலம், ஸ்கைப் அக்கவுண்ட் வைத்திருப்பவர் ஒருவர் தனது சேட் ரூமில் கெஸ்ட் ஆக ஸ்கைப் அக்கவுண்ட் இல்லாத தன் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.
அப்பொழுது அவர்களுக்கு ஒரு லிங்க் செல்லும்.
பின்பு, அந்த லிங்ன்கை க்ளிக் செய்தால் போதும். அக்கவுண்ட் இல்லை என்றாலும் ஸ்கைப் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தலாம்.
இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
  • முதலில், ஸ்கைப் அக்கவுண்ட் வைத்திருப்பவர் வெப் ஸ்கைப் சென்று சேட் ரூம் மற்றும் கெஸ்ட் லிங்க் ஆகியவற்றை தயார் செய்ய வேண்டும்.
  • இதில், நீங்கள் தான் அந்த பக்கத்தின் முதன்மையானாராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இப்போது, ஸ்டார்ட் த கான்வர்செஷன் மற்றும் டவுன்லோடு ஸ்கைப் என இரண்டு விதமான ஆப்சன்கள் தோன்றும்.
  • இதில், ஸ்டார்ட் த கான்வர்செஷன் தேர்வு செய்து உங்கள் பெயரை கேட்கபட்ட இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு, ஸ்டார்ட் த கான்வர்செஷன் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது, உங்களுக்கு சேட் ரூமின் லிங்க் தோன்றும்.
  • இந்த லிங்க்-ஐ நீங்கள் காப்பி செய்து உங்களுடைய நண்பர்கள் யார் யாரிடம் வீடியோ மூலம் பேச வேண்டுமோ அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
  • லிங்க்-ஐ பெற்ற உங்களுடைய நண்பர்கள் அந்த லிங்க்கை க்ளிக் செய்தாலே போதும் உங்களது வீடியோ உரையாடலில் கலந்து கொள்ளலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-