கடந்த நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது.
இதனால் இந்தியாவில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ரூபாய் ேநாட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக்கொள்வதற்கு டிசம்பர் 30 கடைசி நாள்.
மேலும் ரிசர்வ் வங்கியில் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இந்த ரூபாய்களை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வைத்துள்ள ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ள இந்த கால அளவு போதாது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் வைத்துள்ள தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அங்கேயே வசதி செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக துபாயில் வசிக்கும் மும்பையை சேர்ந்த கெஹி கூறுகையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தடை செய்யப்பட்ட பணத்தை ரூ.25 ஆயிரம் வரை இந்திய வங்கிகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
துபாயில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த நிதி ஆலோசகர் பென்சி தாரகன் கூறுகையில், இந்திய ரூபாயை மாற்ற மேலும் ஒரு ஆண்டு காலம் தங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
மற்றொரு இந்தியரான அனுராக் யாஷ்யப் கூறுகையில், அரபு நாடுகளில் உள்ள இந்திய வங்கியான பரோடா வங்கியில் இந்த பணத்தை மாற்றி கொள்ள அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.