தந்தி TV யில் பாண்டே, முதல்வர் 05/12/2016 மாலை 05:30 மணிக்கு காலமாணதாக அறிவிப்பு...
சமூக வலையதளத்தில், முதல்வர் 05/12/2016 இரவு 11:10 மணிக்கு காலாமாணதாக மோடி அறிவிப்பு...
அப்பல்லோ நிர்வாகம், முதல்வர் 05/12/2016 இரவு 11:30 மணிக்கு மரணம் அடைந்தாக அறிக்கை வெளியீடு..
முதல்வர் சாப்பிட்டார், முதல்வர் நடக்கிறார், முதல்வர் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம் என்று சொல்லி தினம் தினம் அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ நிர்வாகம்.
கடைசி வரை முதல்வர் சிகிச்சை எடுக்கும், ஒரு புகைப்படத்தை கூட வெளியிடவில்லை ஏன் ?
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா ஜெயக்குமாரை, மருத்துவமனைக்குள் அனுமதிக்காததன் மர்மம் என்ன?
முதல்வர் இறப்பதற்கு முன்பே தந்தி TVயில், முதல்வர் காலமாணதாக எதற்காக முன் கூட்டியே அறிவித்தது.
ஜெயலலிதா கைது செய்யபட்ட நேரத்தில் பேச முடியாமல் குழுங்கி குழுங்கி அழுது கொண்டே, பதவியேற்பு உறுதிமொழியை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பதவியேற்ற அதிமுக அமைச்சர்கள்.
ஜெயலலிதா இறந்து அரை மணி நேரம் கூட ஆகாத இந்த துக்கத்திலும் , ஆளுநரை சந்தித்து தற்போது சிறப்பாக அழுகையின்றி உறுதி மொழி எடுத்ததின் பிண்ணனி என்ன ?
முதல்வர் மரணத்தில், மர்ம முடிச்சுகள் அவிழுமா !
முதலமைச்சர் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் இல்லை.....
1 ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தியம் செய்யவில்லை- பண பற்றாக்குறையா அல்லது ஆள் பற்றாக்குறையா?
2 மருத்துவமனை ஏன் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை-இவரின் உடல்நிலையை புதிராக்கியது ஏன்?
3 மருத்துவமனையில் இவருடன் கூடவே இருந்தவர்கள் யார் யார் ?
4 நேற்றுவரை முழுவதும் குணமாகிவிட்டார் என்று சொல்லப்பட்டவர் திடீரென்று மாரடைப்புக்கு ஆட்பட்டது எப்படி?
5 மாரடைப்புக்கு ஆட்பட்ட நாளன்று இவரை யாரெல்லாம் சென்று பார்த்தனர் ?
6 இதுவரை அறிக்கைவிடாத அப்பல்லோ நிர்வாகம் நேற்றிலிருந்து மணிக்கு ஒருமுறை அறிக்கை விடுவது ஏன்?
7 ஒரு முதல்வர், இந்த மாநிலத்துக்கே சொந்தமானவர், எப்படி யாருடைய பிடியில் மருத்துவமனை நிர்வாகம் அவரை இதை நிலையில் அப்பல்லோவில் மாத கணக்கில் வைத்திருந்தது?
8 மாரடைப்புக்கு ஆட்பட்ட நாளுக்கு முந்தைய மூன்று நாட்களுக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட உணவு, மருந்துகள் என்ன?
9 ஒரு புகைப்படத்தைக்கூட மருத்துவமனை வெளியிடாதது ஏன் ?
10 ஒரு முழுமையான ஒவ்வொரு நிமிடத்துக்கும் நடந்தது என்ன என்ற அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவேண்டும்.
11 அவருடன் கடைசியாக பேசியவர் யார் அது எப்போது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்?
12 அவர் மருத்துவமனைக்கு அழைத்துவரப்படுவதற்கு அழைப்பு விடுத்தவர் யார்?
தவிர
அவரின் இந்நிலைமைக்கு மருத்துவமனை நிர்வாகமும், உடன் இருந்தவர்களும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். அவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட தேதியிலிருந்து அவரிடம் பெறப்பட்ட கையொப்பம் மற்றும் கை நாட்டு அனைத்தும் செல்லாது என கோர்ட் சீக்கிரம் அறிவிக்கவேண்டும்.
இதுவே ஒரு சாதாரண/
சக மனிதனின் வேண்டுகாேள்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.