அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதி- ஓமன் நாட்டையும் இணைக்கும் புதிய தரைவழிச் சாலையின் கட்டுமானப் பணிகள் பெருமளவில் நிறைவு பெற்று 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது. 

பொதி மணல் சூழ்ந்த பாலைவன வனாந்தர வெளியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை ஒர் 'பொறியியல் அற்புதம்' (Engineering Marvel) என வர்ணிக்கப்படுகிறது.

இதுவரை சவுதிக்கும் ஓமனிற்கும் நேரடி சாலை மார்க்கம் இல்லாத நிலையிலும் ஆண்டிற்கு சுமார் 1 லட்சம் ஓமானியர்கள் சுமார் 2000 கி.மீ. சுற்றிக்கொண்டு அமீரக (UAE) சாலை மார்க்கம் வழியாக ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்கின்றனர். 

அதேபோல் சவுதி அரேபியர்களும் ஓமனின் கோடைவாசஸ்தலமான 'ஸலாலா'விற்கும் அமீரகம் வழியாகவே பயணித்து வருகின்றனர்.

இருபுறமுமாக 680 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இப்புதிய பாலைவன வனாந்தர சாலையால் சுமார் 800 கி.மீ தூர பயணம் மிச்சமாகும். 

ஓமன் பகுதியில் 160 கி.மீ சாலைகள் சுமார் 200 மில்லியன் ஓமன் ரியால் செலவிலும், சவுதி பகுதியில் 566 கி.மீ சாலைகள் 1 பில்லியன் சவுதி ரியால் செலவிலும் போடப்பட்டுள்ளன.

பாலைவன மணற் பள்ளத்தாக்குகளில் (Sand Dunes) பாலங்கள் கட்டுவதற்காக சுமார் 130 கியூபிக் மில்லியன் மணல்கள் கொண்டு செல்லபட்டன என்றும் இந்த மணலை கொண்டு 26 பிரமிடுகளை எழுப்ப இயலும் என்றும் இந்த சாலை கட்டுமானத்தில் ஈடுபட்ட Famco நிறுவனம் கூறியுள்ளது 

என்றாலும் இந்த சாலையில் போதிய பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், ஓய்விடங்கள், வாகனப் பழுது நீக்கும் வசதிகள் மற்றும் சாலையோர மின்விளக்குகள் ஆகியவை போதியளவில் அமைக்கப்படும் வரை இந்த மக்கள் நடமாட்டமில்லா வனாந்தர சாலை மிகவும் ஆபத்தானவையே. 

இந்தக்குறைகளை அகற்றும் முயற்சியாக ஓமன் தனது பகுதியில் அத்தியாவசிய கட்டமைப்புக்களை ஏற்படுத்த டெண்டர் விடும் பணிகளை துவங்கியுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-