அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர் கதையாகி வருகிறது. அப்படி பாதிக்கப்பட்டு தற்போது புது வாழ்வை தொடங்கியிருக்கும் பெண் தான் ஷபீனா!

அவர் வாழ்க்கை கதையை அவரே சொல்கிறார் கேளுங்கள்,

நான் இந்தியாவின் கான்பூரில் பிறந்தவள், எனக்கு திருமண வயது ஆனவுடன் என் பெற்றோர் வாசிம் என்னும் நபரை எனக்கு திருமணம் பேசி முடித்தார்கள்.

திருமணத்துக்கு சில மாதம் இருந்த நிலையில் வாசிம் என்னிடம் எல்லை மீறியும், வெளியில் சுற்ற தன்னுடன் வரவும் வற்புறுத்தினான்.

நான் திருமணத்துக்கு முன்னர் இதெல்லாம் முடியாது என மறுத்ததால் கோபம் கொண்ட அவன் நான் தூங்கி கொண்டிருந்த சமயம் என் முகத்தின் மீது ஆசிட் வீசினான்.

வலியால் துடித்த நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் எனக்கு 8 சர்ஜரி ஆப்ரேஷன் முகத்தில் நடந்தது. ஆனாலும் என் பழைய அழகிய முகம் எனக்கு கிடைக்கவில்லை.

இந்த சம்பவத்தை செய்த வாசிமை பொலிசார் கைது செய்தார்கள். என் வாழ்க்கையே முடிந்து விட்டது போல இருந்தது எனக்கு!

அப்போது தான் முகமது ஷம்சத் என்னும் நபரை சந்தித்தேன், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

அவர் மனைவி வேறு ஒரு ஆணுடன் தன் வாழ்க்கையை தேடி போய்விட்டாள் என கேள்விப்பட்டேன். அவரின் இரண்டு குழந்தைகளும் எனக்கு பிரியமாக ஆனார்கள்.

முகமது என்னை திருமணம் செய்ய விரும்பினார், உன் முகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், உன் மனம் ரொம்ப அழகு என அவர் கூறினார்.

எனக்கு அவரை பிடித்து போக சமீபத்தில் எங்கள் திருமணம் நடந்தேறியது.

என் வாழ்க்கை முடியவில்லை! இப்போது தான் தொடங்குகிறது மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஷபீனா!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-