அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதி அரேபியா, டிச-22
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக சரிந்ததால் ஏற்பட்ட விளைவின் காரணமாக கடந்த வரும் சுமார் 97 பில்லியன் டாலர் அளவுக்கு பற்றாக்குறை பட்ஜெட் போட வேண்டிய நிலைக்கு சவுதி அரசு தள்ளப்பட்டது.

விளைவு அத்துடன் நிற்கவில்லை, பெட்ரோலிய வருவாய் தவிர்த்த மாற்று வருவாய்க்கான வழிகளை குறித்து ஆராய தூண்டியதுடன் பல்வேறு கட்டுமானப் பணிகளை நிறுத்தி, அமைச்சர்களின் சம்பளத்தை குறைத்து, அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்தி என பல்வேறு நடவடிக்கைகளை சவுதி அரசு எடுத்ததுடன் மாற்றுப் பொருளாதார திட்டத்திற்கான 'தொலைநோக்கு திட்டம் 2030' என்ற ஒன்றையும் அறிவித்தது.

இந்நிலையில், சமர்ப்பிக்கப்படவுள்ள சவுதி அரசின் புதிய பட்ஜெட்டில் பெட்ரோல் சில்லரை விலை உயர்த்தப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தண்ணீர் மற்றும் மின்சார மானியங்களை ரத்து செய்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 200 மில்லியன் ரியால்களை மிச்சப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Source: AFP / Msn

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-