அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஒரு முறை இரவில் சென்னையில் இருந்து மதுரைக்கு 3 மணியளவில் வந்த போது தாடி அதிகம் வைத்திருந்த காரனத்தினால் மட்டும் வில்லாபுரத்தில் 4 காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டு பெயர் ராஜா என சொல்ல.. ராஜாவா இல்லை ராஜா முஹம்மது வா ? என கேட்டதிலேயே அறிந்துகொண்டேன் காவலர்களின் கேவலமான புத்தியை..

.

டிராவல் பேக்கில் என்ன இருக்கிறது என கேட்டனர் நான் என்னுடைய சட்டைகள் , உடைமைகள் உள்ளன என கூற உள்ளே வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ஜெலட்டின் குச்சி வைத்திருப்பது போல் உள்ளது என அனைத்தையும் சோதனையிட்டனர் .

..

உள்ளே அவர்கள் தேடிய ஏதும் கிடைக்கவில்லை,

.

பேக் எடுத்துவிட்டு இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் கெட்டவர்கள் என நினைக்காதீர்கள் என ஒரு வார்த்தை சொன்னதற்கு நீ போகக்கூடாது நில் என அதிகாரத்தை செலுத்தினர்.

.

அருகில் நின்ற ஒரு ஏட்டு பெண் கலையரசி என்ற ஒருவர்.. நீ என்ன ஆளுக என அவரின் மகளை கட்டிகொடுப்பது போல விசாரித்தார்,

.

நான் யாரிடமும் சாதியை சொல்ல தயங்குவதால் அந்த பெண் காவலரிடம் சாதியெல்லாம் சொல்லமுடியாது என மறுப்பு தெரிவிக்க.. மறுபடியும் வினவினார்..

.

ரோட்டில் போகிறவர்கள், வருகிறவர்களிடம் நீ என்ன சாதி என கேட்க உங்களை பணியில் அமர்த்தவில்லை மக்களுக்கு காவலாக பாதுகாப்பு கொடுப்பதற்கு தான் உங்களை இங்கே பணியில் அமர்த்தியுள்ளனர் என நான் சொல்ல

.

அருகில் நின்ற இன்னொரு காவலர் கை ஓங்கி பேக்கை கீழே வை நீ போககூடாது இன்ஸ்பெக்டர் வந்தவுடன் செல்லலாம் என்றார்.

.

நீ உன் சாதியை சொல்லாமல் இங்கிருந்து விடமாட்டோம் என கூறிய காரணத்தால் தேவர் என சொன்னேன், அதான் நீ இவ்ளோ திமிராக இருக்கிறாய என கேட்க நான் என்ன திமிராக இருந்தேன் என கேட்டேன், அப்போது மணி அதிகாலை 4 சிறிது நேரம் ஆனவுடன் வீட்டிற்கு கிளம்பு என அட்ரஸ், போன் நம்பர் வாங்கிகொண்டு விட்டனர்.

.

கோபம் கொந்தளிக்க அவர்கள் முகத்தில் எச்சிலை துப்பமுடியாமல் அவர்கள் முன்னரே கீழே துப்பினேன்.

.

ஆதங்கம் அடங்கவில்லை நான் ஒருவேளை நிஜமாகவே ஒரு இசுலாமியனாக இருந்தால் அந்த இரவில் என்னுடைய நிலைமை?

.

இவர்களை சும்மா விடக்கூடாது, முதலமைச்சர் பிரிவிற்கு ஈமெயில் அனுப்பவேண்டும், பள்ளிவாசல் சென்று ஜமாத்தில் சொல்லி இவர்கள் மீது வழக்கு தொடுக்கவேண்டும் என்றெல்லாம் என்னம் வந்தது..

.

அவர்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் எல்லாம் இருக்கும் என அவர்களுக்கு மன்னிப்பு பிச்சை கொடுத்தேன்.

..

நன்றியோடு இருங்கள் காவல்துறையினரே..

.

ஒருவன் தவறு செய்தான் என்றதற்காக எல்லோறையும் துன்புறுத்தாதீர்கள்..

.

- இரா.பசும்பொன் ராஜா

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-