அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், டிச.15-
துபாயில் வசிப்பவர்கள் மருத்துவ காப்பீடு பெற்றால் மட்டுமே, தங்களது விசாவை புதுப்பிக்க முடியும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்தது.

இது குறித்து துபாய் சுகாதார ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ஹைதர் அல் யூசுப் நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்டாய மருத்துவ காப்பீடு
இந்த ஆண்டு மருத்துவ காப்பீடு பெற இன்னும் 2 வாரங்களே கால அவகாசம் உள்ள நிலையில் இன்னும் சிலர் மருத்துவ காப்பீடு பெறாமல் உள்ளனர். 

ஏற்கனவே உள்ள சுகாதார ஆணையத்தின் விதிகளின்படி ஜனவரி 1-ந் தேதிக்குள் துபாயில் பணியாற்றுபவர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் மருத்துவ காப்பீடு பெற வேண்டும்.

இந்த மருத்துவ காப்பீட்டை இங்கு வசித்து வருபவர்களை சார்ந்துள்ளவர்கள், மனைவி அல்லது கணவன், குழந்தைகள், வீட்டில் வேலைக்கு உள்ளவர்கள் போன்ற அனைவரும் பெற வேண்டும்.

இதற்காக துபாய் சுகாதார ஆணையம் அமீரக குடியுரிமை வழங்கல் மற்றும் வெளிநாட்டவர் விவகாரத்துறையின் ஒத்துழைப்பை பெற்றுள்ளது. 

மருத்துவ காப்பீடு பெறாதவர்களுக்கு மாதம் 500 திர்ஹாம் அபராதம் விதிப்பதுடன் அவர்களின் விசாவை புதுப்பிக்க தடை விதிக்கப்படுகிறது.

புதிய சட்டம் அமல்
இதனால் இந்த புதிய விதியானது கடுமையாக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன்படி மருத்துவ காப்பீடு பெற்றால் மட்டுமே தாங்கள் பெற்றுள்ள விசாவை புதுப்பிக்க முடியும். 

அல்லது விசா காலம் நிறைவடைந்தால் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதற்காக சுகாதார ஆணையம் பரிந்துரை செய்துள்ள 50 மருத்துவ காப்பீடு நிறுவனங்களின் பட்டியல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது. 

இதனால் அனைவரும் மருத்துவ காப்பீட்டை விரைந்து பெற கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

S.ஹக்கீம் , அபுதாபி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-