அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நம் இந்தியாவின் ஒரு மாநில முதல்வரால் தனது மாநில நலனுக்காக அயல்நாட்டிலும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார் அமீரகத்திற்கு அரசுமுறை பயணமாக வருகை தந்துள்ள கேரள முதல்வர் பினராயிவிஜயன் இவர் வெளிநாடுவாழ் மலையாளிகள் நல இலாகாவையும் கவனித்து வருகிறார்.

துபை ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களையும் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்களையும் சந்தித்து 'மலையாளிகள் நலன் சார்ந்த' பல்வேறு கோரிக்கைகளை எழுப்பியதுடன் கேரளாவிற்கும் வருமாறு அழைப்பு விடுத்தார்.

முக்கிய கோரிக்கைகள் வருமாறு:
மலையாளிகளுக்கு என ஷார்ஜாவில் தனி நகரம் (Family City) மற்றும் அதற்கான இலவச நிலம் கலாச்சார மையம் (Cultural Center), மலையாள மொழிக்கு முக்கியத்துவம் தரும் அதிகமான பள்ளிக்கூடங்கள் என நீள்கிறது.

கேரளாவில் துபை மற்றும் ஷார்ஜா அரசுகளின் உதவியோடு கொச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் 2021, சுற்றுலா, கடற்கரை பிரதேச வளர்ச்சி, ஆயுர்வேத மருத்துவ மையங்கள் உட்பட பல வளர்ச்சித் திட்டங்கள்.

துபை மீடியா சிட்டியில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்காக மலையாளிகள் முன் பேசிய முதல்வர் பினராயி விஜயன், NRI கமிஷன் சந்தித்த பிரச்சனைகள் களையப்பட்டுள்ளதாகவும் விரைவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் காஜி நடுவர் மன்றம் (Quasi - Judicial Powers) செயல்படும் என்றும்.

வெளிநாட்டில் இறந்த மலையாளிகளின் பிரேதங்களை முற்றிலும் கேரள அரசு செலவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிதாய் வெளிநாடு செல்ல விரும்புவோருக்கான பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் மற்றும் கருப்பு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் குறித்த எச்சரிக்கைகளையும் வழங்குவோம் எனவும் உறுதியளித்தார்.

இது வரையில் மாறி மாறி வந்த தமிழக முதல்வர்கள் சாதித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நமக்காக..... அரசியலை மாற்றி வைத்து உண்மை Comment செய்யவும்....?

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-