அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், டிச-09பரீட்சார்த்த முறையில் சில டேக்ஸிக்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு சோதனைகள் வெற்றியடைந்ததை தொடர்ந்து துபையில் இயங்கும் சுமார் 9500 டேக்ஸிக்களிலும் தலா 3 மினி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தும் பணி துவங்கியது.

இப்பணி 2018 ஆம் அண்டிற்குள் நிறைவுறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக துபை போக்குவரத்துத் துறை {RTA} அறிவித்துள்ளது.

டேக்ஸி பயணிகளின் தனியுரிமை {Privacy) பாதிக்கப்படாத வகையில் பொருத்தப்படும் இந்தக் காமிராக்களில் ஒன்று முழுமையாக டிரைவரை மட்டுமே கண்காணிக்கும் மற்ற இரண்டும் டேக்ஸியின் முன்புறமும் பின்புறமும் பொருத்தப்பட்டிருக்கும். 

இதன் மூலம் டேக்ஸி டிரைவர்கள் பயணிகளுடன் நடந்து கொள்ளும் போக்கும் அவர்களின் பணிச்சோர்வும் கண்காணிக்கப்படுவதுடன், டிரைவர்கள் மீது பயணிகள் சுமத்தும் புகார்களை ஆராயவும் பயன்படும் என்பதால் இது இருவரின் மீதான நம்பகத்தன்மைக்கும் சாட்சியாய் அமையும்.

இத்தகைய கேமிராக்கள் பொருத்தப்பட்ட டேக்ஸிக்கள் ஏற்கனவே அபுதாபியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-