அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதி அரேபியா, டிச-24
சவூதியை பொருத்தவரை ஆண், பெண் கலப்பாக வேலை பார்க்க அனுமதியில்லை என்றாலும் பெண்களின் தனித்துவம் போற்றும் வேலையை பார்க்க எந்தத் தடையும் இல்லை. ஒரு சில வேலைகளை பெண்களால் மட்டுமே திறம்பட செய்யவும் முடியும்.

இந்நிலையில் சவுதி புள்ளியியல் துறை (General Authority of Statistics) வெளியிட்டுள்ள ஒப்பீட்டின் படி, வேலைக்கு போகும் பெண்களில் சுமார் 72,895 பேர் விவாகரத்து பெற்றிருப்பதாகவும் அதேவேளை வேலைக்குக் செல்லாத பெண்களில் சுமார் 14,856 பேர் மட்டுமே விவாகரத்து பெற்றிருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விவாகரத்திற்கு இன்னொரு முக்கிய காரணமாக கணவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தாலும் பணியிடத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அழுத்தங்களுக்கு மேல் "தாங்கள் சம்பாதிக்கின்றோம்" என்ற மனநிலையுமே வேலை செய்யும் பெண்களிடையே விவாகரத்து அதிகரித்திருப்பதன் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவாகரத்திற்கும் வேலைக்கும் முடிச்சுப் போடக்கூடாது என டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பொங்கியுள்ளோரின் வார்த்தைகள் புள்ளியியல் துறையின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வண்ணமே வெளியாகியுள்ளது. அதில் பல டிவிட்டர்வாசிகள் கூறியுள்ள கருத்துச் சுருக்கம் யாதெனில், எங்களுக்கு கணவரை விட வேலையும், சம்பளமுமே முக்கியம்.

Sources: Al Riyadh / Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-