அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாயில் பிரித்தானிய பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய இளைஞன் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் துபாயில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 31ம் திகதி பிரித்தானியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அப்போது அந்த பொருட்களை குறித்த நபர் தான் டெலிவரி செய்ய சென்றுள்ளார்.

இந்நிலையில் தோட்டத்தில் அமர்ந்திருந்த அந்த பெண் டெலிவரி செய்ய வந்த நபரை தோட்டப் பகுதிக்கு அழைத்து ஆர்டர் செய்த பொருட்களை வாங்கியுள்ளார்.

பொருட்களை கொடுத்துவிட்டு அவர் செல்லும் போது அந்த பெண்ணை கட்டியணைத்து, முத்தமிட்டுள்ளார். மேலும், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். உடனே குறித்த பெண் பொலிசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இந்திய இளைஞன், அந்த பெண் தனக்கு மது கொடுத்து அழைத்ததாகவும், ஆனால் தான் அதை ஏற்க மறுத்தவுடன் இப்படி மானபங்க கதை கட்டுவதாகவும் கூறினார்.

ஆனால் தடவியல் நிபுணர்கள் அந்த பெண்ணின் கழுத்தில் அவரின் டிஎன்ஏ இருப்பதாகவும், அதனால் அவர் அந்த பெண்ணை தொடவோ, முத்தமிடவோ செய்திருக்கலாம் என்று அறிக்கை சமர்பித்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-