இதன்படி, பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்புச்சான்றிதழ் கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.
பிறப்புச்சான்றிதழுக்கு பதில் பிறப்பு தேதியுடன் கூடிய பான்கார்டு, மாற்றுச்சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவைற்றை பிறப்புச்சான்றிதழுக்கு ஆதாரமாக வழங்கலாம்.
மணமானவர்கள் திருமணச்சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற தேவையில்லை.
தளர்த்தபட்ட இந்த விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1989 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது பிறப்புச்சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என்பது கட்டயம் என்ற விதி தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விதியை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.