இப்பயிற்சியில் சேர விரும்புவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராவும், 40வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
குறைந்த பட்சம் 8ஆம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
இந்தப் பயிற்சி 28.12.2016 அன்று தொடங்கி தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சியில் கேஸ் வெல்டிங், ஆர்க் வெல்டிங், SS & MS டிக் வெல்டிங், மிக் வெல்டிங் ஆகிய வெல்டிங் பயிற்சிகள் சிறந்த முறையில் அளிக்கப்படும்.
பயிற்சி காலங்களில் உள்ள அனைத்து வேலைநாட்களிலும் தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப் பட்டதாகும்.
இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதல் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியற்றின் நகல், நான்கு பாஸ்போர்ட் அளவு, ஒரு ஸ்டாம்ப் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து டிசம்பர் மாதம் 27ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
27ம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சங்குப்பேட்டை பேருந்து நிறுத்தம், மதனகோபாலபுரம், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328 277896 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.