அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இந்தியாவில் விமானப் படை அதிகாரிகள் பணியில் இருக்கும் போது தாடி வளர்க்க தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

விமானப் படை அதிகாரியாக இருந்தவர் அன்சாரி அப்தாப். 2008-ம் ஆண்டு நீண்ட தாடி வைத்திருந்த காரணத்தால் விமானப் படையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அன்சாரி வழக்கு தொடர்ந்தார். தாம் தாடி வைப்பது என்பது மதரீதியான என அன்சாரி தம்முடைய மனுவில் வலியுறுத்தியிருந்தார். 

அன்சாரியின் இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. 

அப்போது, விமானப் படை அதிகாரிகளுக்கான கட்டுப்பாடுகள், ஒழுக்கம் என்பது ஒரே சீரானதாக இருக்க வேண்டும்.

ஆகையால் விமானப் படை அதிகாரிகள் பணியில் இருக்கும் போது மதரீதியான காரணங்களுக்காக தாடி வளர்க்க கூடாது என்று உத்தரவிட்டனர். 

மேலும் பெரிய தாடி வைத்திருந்ததற்காக அன்சாரி அப்தாப்பின் டிஸ்மிஸ் சரியானதே எனவும் அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-