அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதி அரேபியாவிற்கு வழங்கி வரும் இராணுவ ஆதரவைக் குறைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆயினும் இது தொடர்பில் அமெரிக்காவால் தம் நாட்டிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என சவூதி வெளியுறவு அமைச்சர் அப்டெல் அல்-ஜுபைர் தெரிவித்தார்.

இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி சவூதிக்கு வியஜம் மேற்கொண்டிருந்த போது இராணுவ ஆதரவுக் கட்டுப்பாடுகள் குறித்த விடயத்தை விட ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கை தொடர்பாகவே அதிக கவனம் செலுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், யேமன் மீதான சவூதியின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு வழங்குவதை கட்டுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாவும், குறிப்பாக வெடிமருந்து விநியோகத்தை நிறுத்தல் உள்ளிட்ட விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டமுதல் யேமன் மீது இராணுவ ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சவூதி முன்னெடுத்து வரும் விமானத் தாக்குதல்களினால் அப்பாவிப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்படுகின்றமை, சர்வதேச ரீதியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் சவுதி மீது போர் குற்றங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சவுதிக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள், தங்கள் மீதும் இக்குற்றச்சாட்டுக்கள் பலமாக திசைதிரும்புவதற்கு முன்னதாக அதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-