அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று     வாகனத்தை ஓட்டி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் இளைஞர் ஒருவர்   சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர் பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேட்டை சேர்ந்த அன்னமுத்து பஞ்சாயின் மகன்  நீலகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அங்குள்ள முதலாளி(அரபி) ஒருவரிடம் பணியாற்றி கொண்டிருக்கும் போது ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வெளியே ஓடி வந்து வேறு ஒரு இடத்தில் பணியாற்றி வந்துள்ளார்அதனால் இவரது முதலாளி காவல் நிலையத்தில் இவர் மீது  வழக்கு செய்துள்ளார்

இது விபத்து நடந்தது ஒரு வாரமாகிறது.இவரது உடல் தாயகம் அனுப்புவதில் எவ்வித நடவடிக்கையும் இன்றி பிணவரையிலேயே உடல் இருக்கிறது.

 உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஊருக்கு அனுப்ப முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நமது குவைத் தமிழ் அமைப்பு உதவுமா....?

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-