அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றன. 

 ஜியோ சேவைகளின் கீழ் மிகவும் விலை குறைந்த டேட்டா சேவைகள் மற்றும் ஜியோ செயலிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. 

இதில் ஜியோ வாய்ஸ் கால்கள் வாழ்நாள் முழுக்க இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


 ஜியோவுடனான போட்டியை சமாளிக்க ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் சிறப்பு டேட்டா திட்டங்களை அறிவித்த போதும், இவை எதுவும் ஜியோ வழங்கியது போல் அமையவில்லை. 

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. 

இதன் மூலம் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சிறப்பு விலையில் கிடைக்கின்றன.

ஏர்டெல் அறிவித்திருக்கும் இரண்டு புதிய திட்டங்கள் பிரீபெயிட் பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை ரூ.145/- மற்றும் ரூ.345/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ரூ.145/- திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் தங்களது 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு 300எம்பி அளவு 4ஜி டேட்டா மற்றும் அனைத்து ஏர்டெல் நம்பர்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ள முடியும். 

இண்டர்நெட் இணைப்பு வசதி கொண்ட பீச்சர்போன்களுக்கு 50எம்பி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

 மற்றொரு புதிய திட்டத்தில் ரூ.345/- செலுத்தி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 1ஜிபி அளவு 4ஜி டேட்டா மற்றும் இந்தியா முழுக்க அனைத்து நம்பர்களுக்கும் இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் எண்களுக்கு இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 

இத்துடன் பீச்சர்போன் பயனர்களுக்கு 50எம்பி அளவு டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி 28 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

*இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் திட்டங்களின் விலை டெல்லி வட்டாரத்திற்கு மட்டும் பொருந்தும் என்றும் மற்ற வட்டாரங்களின் விலையில் மாற்றங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-