அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், டிச-31
அமீரக இன்ஸூரன்ஸ் கட்டுப்பாட்டுத்துறையின் (The UAE Insurance Authority) புதிய அறிவிப்பின்படி, 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் சலூன் வகை கார்களுக்கும், வகை கார்களுக்கும் முற்றிலும் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் (Fully Comprehensive Insurance) பிரிமியம் தொகை ஏற்றப்பட்டுள்ளது.

சலூன் வகை கார்கள் திர்ஹம் 1,300 வரையிலும் (சராசரியாக 114 திர்ஹம் கூடுதல்), SUV வகை கார்கள் 2.000 வரையிலும் (சராசரியாக 428 திர்ஹம் கூடுதல்) புதிய பிரிமியம் செலுத்த நேரிடும் என்றாலும் சலூன் வகை கார்களின் மொத்த மதிப்பில் 5 சதவிகிதத்திற்கு மிகாமலும், SUV வகை கார்களின் மொத்த மதிப்பில் 7 சதவிகிதத்திற்கு மிகாமலும் பிரிமியம் வசூலிக்கப்பட வேண்டும்.

பிரிமியம் தொகைகள் கார்களின் தயாரிப்பு வருடம், பயன்பாட்டில் உள்ள ஆண்டுகள், மாடல் போன்ற பல காரணிகளை முன்வைத்தே பல இன்ஸூரன்ஸ் நிறுவனங்களாலும் ஏற்ற இறக்கமுள்ள பிரிமியத் தொகைகள் தீர்மானிக்கப்படுகின்றன. 

இந்த பிரிமியம் ஏற்றம் மூலம் சுமார் 50,000 திர்ஹம் மற்றும் அதற்கு குறைவான மதிப்புள்ள கார்களை வைத்திருப்போரே பாதிக்கப்படுவர்.

ஆடம்பரக் கார்கள் மற்றும் 1 லட்சம் திர்ஹத்திற்கு மேல் மதிப்புடைய கார்களுக்கான பிரிமியம் தொகையில் இதுவரை எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

அதேவேளை, கார்களுக்கு விபத்துக்கள் ஏதும் நேரிட்டால் சம்பந்தப்பட்ட ஒட்டுனரின் மீது தவறில்லாத நிலையில் இன்ஸூரன்ஸ் நிறுவனங்கள் விபத்துக்குள்ளான வாகனங்களுக்கு பதிலாக அதேபோன்ற மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்தோ அல்லது நாள் ஒன்று 300 திர்ஹம் வீதம் கணக்கிட்டோ 10 தினங்களுக்கு வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Source: Khaleej Times & Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-