அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதி, டிச-10சவுதி – பஹ்ரைன் இடையே 'கிங் பஹத் காஸ்வே' (King Fahd Causeway) என்ற பெயரில் 25 கி.மீ தூர கடற்பாலம் 1986 ஆம் ஆண்டு கட்டப்பட்டு நவம்பர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. 

இந்தப் பாலத்தில் சராசரியாக நாளொன்றுக்கு இருபுறமுமாக 40,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், 'கிங் ஹமாத் காஸ்வே' (King Hamad Causeway) என்ற பெயரில் புதிய கடற்பாலம் ஒன்றை நிர்மானித்திட ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புதிய கடற்பாலத்தை தனியார் நிறுவனங்கள் கட்டவுள்ளன.

இந்த கடற்பாலத்தையொட்டியே, GCC Railway Network எனப்படும் வளைகுடா அரபுநாடுகளை ஒன்றிணைக்கும் 2,170 கி.மீ. தூரத்திற்கான ரயில்வே திட்டத்தின் கீழ் ரயில்வே கடற்பாலமும் கூடுதலாக அமையவுள்ளது. இந்த புதிய திட்டங்கள் இன்னும் 4 ஆண்டுகளில் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-