இதில் பல சலுகைகள் சவூதி பிரஜைகளுக்கு அறிவிக்கப்பட்டாலும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு புதிய வருமான வரி அல்லாத புதிய வரி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
1- 2017ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 100 சவூதி றியால்கள் வீதம் அரசாங்க வரியாக செலுத்த வேண்டும் அவர்களின் ஸ்பொன்சரில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 சவூதி றியால்கள் வீதம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக, உங்களுடன் உங்கள் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருந்தால் மாதம் ஒன்றுக்கு மொத்தமாக 400 சவுதி றியால்கள் வரியாக செலுத்த வேண்டும்.
2- 2018ம் ஆண்டு முதல் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான மாத வரி 100 சவூதி றியால்களிலிருந்து 400 சவூதிறியால்களாக அதிகரிக்கப்படும்.
அதேபோல், உங்களின் ஸ்பொன்சரில் உள்ளவர்களுக்கும் தலா 400 சவூதி றியால்கள் வீதம் செலுத்த வேண்டும்.
அதேபோல் உங்கள் நிறுவனமும் அரசாங்கதுக்கு தலா 200 சவூதி றியால்கள் வீதம் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரியாக செலுத்த வேண்டும்.
உங்கள் நிறுவனத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களைவிட சவூதி தொழிலாளர்கள் அதிகமாக இருந்தால் 400 சவூதி றியால்களில் இருந்து 300 றியால்களாக குறைவடையும்.
3- 2019ம் ஆண்டு முதல் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான மாத வரி 400 சவூதி றியால்களில் இருந்து 600 சவூதி றியால்களாக அதிகரிக்கப்படும்.
அதேபோல் உங்கள் நிறுவனம் தலா 300 சவூதி றியால்கள் வீதம் அரசாங்க வரியாக செலுத்த வேண்டும்.
வெளிநாட்டு தொழிலாளர்களைவிட சவூதி தொழிலாளர்கள் அதிகமாக இருந்தால் அந்தத் தொகை 500 சவூதி றியால்களாக குறைவடையும்.
4- 2020ம் ஆண்டு முதல் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வரி 600 சவூதி றியால்களில் இருந்து 800 சவூதி றியால்களாக அதிகரிக்கப்படும்.
அதேபோல் உங்கள் நிறுவனமும் அரசாங்க வரியாக தலா 500 சவூதி றியால்கள் செலுத்த வேண்டும்.
அதேபோல், வெளிநாட்டு தொழிலாளர்களை விட சவூதி தொழிலாளர்கள் அதிகமாக இருந்தால் 800 சவூதி றியால்களில் இருந்து 700 றியால்களாக குறைவடையும்.
இந்த சட்டமானது வீட்டுப்பணிப் பெண்கள், வீட்டு வாகன சாரதிகள் மற்றும் துப்பரவு தொழிலாளர்களுக்கு பொருந்ததாது.
http://www.saudi-expatriates.com/2016/12/budget-2017-tax-on-expats-and-companies.html
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.