அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இன்று டிசம்பர் 6 !! பாபர் மசூதி இடிப்பு தினம் !!! வழக்கமாக இஸ்லாமியர்கள் கறுப்பு தினமாக கடைபிடித்து போராட்டங்களை முன்னெடுப்பது வழக்கம்.

ஆனால் இன்று நடந்ததோ வேறு !! நம்முடைய முதலமைச்சர் காலமானதை அடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

 திடீரென காவலர்கள் குவிக்கப்பட்டதால், துக்கத்திற்கு இடையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சில சிரமங்கள் ஏற்பட்டது. 

இதையடுத்து ஒன்றுகூடிய இஸ்லாமிய இளைஞர்கள் பலர், காவலர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை வீதி வீதியாக எடுத்து சென்று விநியோகித்தனர்.

நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால் ,திருவல்லிக்கேனி உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் , பிரத்யேகமாக வீடுகளில் உணவு தயாரித்து, போலீசார்களுக்கு விநியோகித்தது மட்டுமல்லாமல், உணவு தேவைக்கு தொலைபேசி எண்ணையும் கொடுத்திருக்கிறார்கள் !!!

கடந்த ஆண்டு இதே டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்திலும் , இதே போல பல இஸ்லாமிய இளைஞர்கள் உதவியது மறப்பதற்கில்லை!!! 

நம்மில் பலர் அவர்களை பிரித்து பார்த்தாலும், நமக்கு ஏதாவது ஏற்பட்டால் முதலில் அவர்களே வந்து நிற்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது !!!0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-