அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதியில் இரண்டு நபர்களுக்கு இடையே நடந்த சண்டையில் இந்தியர் ஒருவர் சவுதி அரேபியா நபரை கொலை செய்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியர்(தமிழர்) சவுதி சட்டத்தின் படி அவருடைய தலையை துடிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.மரணதண்டனை தேதி அறிவிக்கப்பட்டு தண்டனையை எதிர் நோக்கி இருந்த அவருக்கு அவராலேயே நம்பர் முடியாதபடி ஒருவர் உதவி செய்துள்ளார்.

அவர் பெயர் AwadbinGuraiahAlYami இவர் ஒரு தொழில் அதிபர் இவர் மரணமடைந்த நபரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதையடுத்து SR1.3 மில்லியன் (ரத்த பணம்) diyah பணம் கொடுத்தார்.இதையடுத்து அந்த குடும்பத்தினர் அவனை மன்னித்து தண்டனையில் இருந்து விடுப்பதாக அறிவித்துள்ளனர். 

நீதிமன்றத்தில் அந்த குடும்பத்தினர் மன்னிப்பு ஒப்புதல் மற்றும் இந்திய தொழிலாளி விடுதலை செய்ய வேண்டிய ஆவணங்களை சமர்பித்தனர்.

இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலை காத்திருக்கிறது.இவர் எந்த ஊர் பெயர் போன்ற தகவல்கள்எதையும் அந்த செய்தி தளம் வெளியிடவில்லை.

இந்தஇளைஞர்சவுதியில்உள்ள Najran பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் வேலை செய்தார் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சவுதி இராணுவ வீரர் ஒருவரை வண்டி மோதி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட ஒரு பாகிஸ்தானி ஓட்டுநர் ஒருவர் சவுதி நபர் பிழை செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

நன்றி-Kuwait-தமிழ் பசங்க

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-