அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் கல்வி நிறுவனங்களுக்கே சென்று கடவுச்சீட்டு சேவையை வழங்கும் "ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவையை வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. 

இந்தத் திட்டம் குறித்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தின்கீழ் உள்ள 9 மாவட்டங்களிலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது கடவுச்சீட்டு சேவை மையங்கள் மூலமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. அங்கு முதல்கட்ட சரிபார்ப்புக்குப் பிறகு மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்படும். 

கடவுச்சீட்டு சேவை மையத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க விண்ணப்பதாரர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் வரவேண்டும். "ஸ்டூடண்ட் கனெட்' திட்டத்தில், கல்லூரி மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை முன்பதிவு இல்லாமலேயே, விரும்பும் வேலைநாளில் அருகில் இருக்கும் கடவுச்சீட்டு சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம்.

இந்த வசதி கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் தற்போது தங்கியிருக்கும் விடுதி முகவரி அல்லது பெற்றோரின் நிரந்தர முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த சலுகை மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 

மாணவர்கள் தங்களது பிறப்புச் சான்று, 10-ஆம் வகுப்பு அல்லது பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ், முகவரி ஆவணமான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்குப் புத்தகம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். 

கல்விச் சான்றிதழ் கல்லூரியில் இருக்கும்பட்சத்தில் கல்லூரி முதல்வரின் சான்றொப்பம் பெற்ற நகல், மற்றும் மேற்படி சான்று கல்லூரியில் இருக்கிறது என்பதற்கான முதல்வரின் சான்று கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். 

ஆதாரம் : தினமணி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-