அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 50) கொத்தனார். 

இவர் இன்று அதிகாலை அவரது வீட்டருகே ஊருக்கு ஒதுக்கு புறமாக இயற்கை உபாதை கழித்து விட்டு கால்களை கழுவதற்காக அருகே உள்ள பிச்சைப்பிள்ளை மகன் ஜான்பிரிடட்டோவின் நெல் வயலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு எலிகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

இறந்த போன கொத்தனார் ராஜாவிற்கு, இரு மனைவிகளும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தின் பலப்பகுதிகளில் எலி, உள்ளிட்ட வனவிலங்குகளான மான், மயில், முயல் போன்றவற்றை தடுக்க அரசு இலவசமாக வழங்கும் மின்சாரத்தை கொண்டு சட்டதிற்கு புற்ம்பாக மின்வேலி அமைத்துள்ளதால் கவனக்குறைவானவோ வயலை கடப்பவர்கள் அல்லது அவசர காரணமாக அவ்வழியாக செல்வோர்கள் மின்வேலியில் சிக்கி இறக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

மின்சாரத்துறையினர் சம்பந்தப்படட்ட விவசாயிகளின் மின் இணைப்பை துண்டிக்க வெண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-