அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சிங்கப்பூரில் (work permit) ல் வேலை பார்ப்பவர்கள் தங்களது விசா முடியும் பொழுது சிங்கப்பூரில் இருந்து கொன்டே வேறு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் அதற்கான வாய்ப்பை சிங்கப்பூர் அரசாங்கமே (Ministry Of Manpower ) ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதற்கு செய்ய வேண்டியதாவது, நிறுவனம் மாற விரும்புவபர்கள் தங்களது முழு விவரத்தையும் FCWDS(Foreign Construction Workers Directory System) ல் பதிவு செய்து விட்டு மேலும் நீங்கள் தற்பொழுது வாங்கி கொண்டிருக்கும் சம்பளம் & எதிர்பார்க்கும் சம்பளம் , உங்களுக்கு என்ன வேலை தெரியும், வேலை அனுபவம, மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற முழு தகவலையும் அவர்களிடம் தெரிவித்து விட வேண்டும்.

அதன் பிறகு அவர்கள் உங்களுக்கு சரியான நிறுவனத்தை கண்டுபிடித்து நேர்கானலுக்கு ஏற்பாடு செய்து தருவார்கள் (இதற்கு கட்டணம் $176 மட்டுமே) இதன் கால அவகாசம் 90 நாட்கள். அதாவது உங்களது விசா முடிவடைய 90 நாட்களுக்கு முன்பே இதை செய்ய வேண்டும்.

விவரங்கள் படத்திள் உள்ளது.

குறிப்பு:

புதிய நிறுவனத்திற்கு மாறுவதற்கு தற்பொழுது வேலை செய்யும் நிறுவனத்தின் அனுமதி கடிதம் தேவை இல்லை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-