அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பஹ்ரைன், டிச-28
பஹ்ரைன் வெளியுறவு அமைச்சராக 2005 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிவரும் ஷேக். காலித் பின் அஹ்மது அல் கலீபா அவர்கள் தன்னுடைய வீட்டில் சுமார் 21 ஆண்டுகள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போன்று ஈடுபாட்டுடன் பணியாற்றிய முன்னாள் விட்டுப்பணிப்பெண் 'லைலா' கேரள பெண்ணின் கொல்லம் வீட்டிற்கு சென்று அளவளாவி மகிழ்ந்தார்.

இந்த சந்திப்பை நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் அமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து பலரும் அமைச்சரின் மனிதநேய பண்பை பாராட்டி வருகின்றனர். 


அமைச்சர் ஷேக். காலித் அவர்களின் டிவிட்டர் பக்கத்தை சுமார் 244,000 பின் தொடரும் நிலையில் இதுவரை 13,500 பேருக்கு மேல் வாழ்த்தி டிவீட் செய்துள்ளனர், அது இன்னும் கூடிக்கொண்டே செல்கின்றது.

அமைச்சர் ஷேக். காலித் அவர்கள் 2015 ஆம் ஆண்டுக்கான 'சிறந்த அரேபிய அரசியல்வாதி' என சமூக வலைத்தளவாசிகளால் தேர்வு செய்யப்பட்டு துபையில் நடைபெற்ற விழாவில் கவுரவிக்கப்பட்டார். 


மேலும், 2013 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இருமுறை சமூக வலைதளம் மற்றும் சிறந்த ஊடக ஆளுமையாளர் என்ற விருதையும் வென்றுள்ளார்.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-