அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சீரத்துன் நபி மீலாதுப் பெருவிழா 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் 8 மணிக்கு தேரா தமிழ் பஜாரில் அமைந்துள்ள ராசித் அலி லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெறும். 

இத்தகவலை ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் தெரிவித்தார்.

இந்த மீலாதுப் பெருவிழாவுக்கு ஈமான் அமைப்பின் தலைவரும், அரேபியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகிக்கிறார்.

இந்த விழாவில் மதுரை ஜாமியா இஹ்ஸானுல் உம்மியான் பார்வையற்றோர் மதரஸாவின் நிர்வாகி மௌலவி முஹம்மது ஷக்கீர்ல் தாவூது மற்றும் துபாய் இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் மௌலவி தாரிக் அபு ஜாசிம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

நெல்லை அபுபக்கர் இஸ்லாமிய பாடல்களை பாடுகிறார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி இரவு 10.30 மணிக்கு நிறைவடையும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை முஹம்மது மஹ்ரூப், உபூர் காக்கா, கீழை ஹமீது யாசின், திருச்சி பைசுர் ரஹ்மான், திண்டுக்கல் ஜமால் முகைதீன், கோட்டாறு சாதிக், பெரம்பூர் சித்திக், யாக்கூப், காதர், முகைதீன், இக்பால் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-