அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

எழுத்துருவில் இருக்கும் பத்திரங்கள், கட்டண ரசீது உள்பட அனைத்து விதமான வார்த்தை வடிவிலான எழுத்துருக்களையும் மிக எளிதாக டிஜிட்டைஸ் செய்ய உதவும் செயலி ஒன்றை மைக்ரோசாப்ட் வெளியிட்டிருக்கிறது.


நியூயார்க்:

’ஆஃபீஸ் லென்ஸ்’ என்ற பெயர்கொண்ட இந்தப் புதிய செயலி, வெள்ளை போர்டுகளில் இருக்கும் எழுத்துக்கள், புகைப்படங்கள், உள்ளிட்டவைகளை மேம்படுத்தி அவற்றை PDF, Word, Powerpoint ஃபைல்களாக மாற்ற உதவுகிறது.

ஆஃபீஸ் லென்ஸ் செயலியில் எடுக்கப்படும் புகைப்படங்களை மைக்ரோசாப்டின் ஒன் டிரைவ் அல்லது ஒன் நோட் உள்ளிட்ட மென்பொருள்களில் சேமிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக, இந்த புதிய ஆஃபீஸ் லென்ஸ் செயலியானது, உங்களது கையில் ஸ்கேனர் ஒன்றை வைத்திருப்பதற்கு சமமானது எனலாம். இந்த செயலி எவ்வித அட்டை அல்லது போர்டுகளில் இருக்கும் குறிப்புகளை டிஜிட்டைஸ் செய்து விடும். உங்களுக்கு முக்கிமானதாக இருக்கும் தரவுகள், கோப்புகள் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாகவும் எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

ஆஃபீஸ் லென்ஸ் செயலியில் சாதாரணமாக தரவு அல்லது கோப்புகளை புகைப்படம் எடுக்கும் போது, அசலில் இருப்பதைவிட அதிக துல்லியமான புகைப்படம் கிடைக்கும்.

இத்துடன் ஆஃபீஸ் லென்ஸ் செயலி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பயன்பாட்டிற்கு ஏற்றபடி தேவையான அளவில் வெட்டி எடுக்கவும் (கிராப்) முடியும். மேலும், வெள்ளை நிற பின்னணியில் இருக்கும் எழுத்துக்களை துல்லியமாக படமாக்க 'வைட்போர்டு மோடு' வழங்கப்பட்டுள்ளது. 'டாக்குமென்ட் மோடு' மூலம் ஆஃபீஸ் லென்ஸ் தேவையான அளவு நிறங்களை பிரதிபலித்து புகைப்படங்களை, படிப்பதற்கு ஏதுவாக மாற்றுகிறது.

அவசரத்தில் நீங்கள் படமாக்கிய புகைப்படத்தை உங்களது விருப்பத்திற்கேற்ப ஒன் நோட், ஒன் டிரைவ் அல்லது உங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற கருவிகளிலும் சேமித்து வைக்க முடியும்.

'பிஸ்னஸ் கார்டு மோடு' என்ற வசதியின் மூலம் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்களை எடுத்து அவற்றை நீங்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் அட்ரெஸ் புக் அல்லது ஒன்நோட் உள்ளிட்டவற்றில் சேமிக்க உதவும். இந்த அம்சம் முதல்கட்டமாக, ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ் மற்றும் சீன மொழிகளில் நன்கு வேலை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஃபீஸ் லென்ஸ் செயலி மூலம் நீங்கள் படமாக்கிய தரவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயனர்கள் தங்களின் விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐடியூன்ஸ் பிளே ஸ்டோர்களில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஆஃபீஸ் லென்ஸ் செயலி அனைத்து இயங்குதளங்களிலும் இலவசமாக கிடைக்கிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-